கலைக்கப்படுகிறதா அமமுக?- டி.டி.வி. தினகரன் பேட்டி

கலைக்கப்படுகிறதா அமமுக?- டி.டி.வி. தினகரன் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் டி.டி.வி. தினகரன். சசிகலா விடுதலைக்குப் பிறகு, அமமுக பிரமுகர் ஒருவரது இல்லத் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக மதுரை வந்த அவரது பேச்சில் அதைப் பார்க்க முடிந்தது.  “சின்னம்மாவை வரவேற்க அலைகடலென திரண்டு வாருங்கள். அதே நேரத்தில் பெங்களூரு - சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி சின்னம்மாவுக்கும் எனக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடாதீர்கள்” என்று திருமண மேடையில் பேசிய அவர், பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதிலும் சின்னம்மா புகழ் பாடிய அவர், மறந்தும்கூட முதல்வரையோ, அதிமுக அமைச்சர்களையோ விமர்சிக்கவில்லை. அதுபோன்ற கேள்விகளுக்கு நழுவலாகவே பதில் அளித்தார். கிடைத்த சிறிய இடைவெளியில் காமதேனு சார்பில் அவருடன் உரையாடியதிலிருந்து...

மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் உங்களை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றிப் பரிசீலிப்பதாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். அதேபோல அவர்கள் தரப்பில் மன்னிப்பு கேட்டால், எந்தெந்த அமைச்சரை எல்லாம் ஏற்பீர்கள், யாரை ஏற்க மாட்டீர்கள்?

ஊகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எங்களது ஒரே குறிக்கோள் திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது, அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான். யாரையாவது பழிவாங்க வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எல்லாம் எங்களுக்குக் கிடையாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in