நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்குப் போகும்!- கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்குப் போகும்!

நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்குப் போகும்!- கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்குப் போகும்!

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில், விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றிருக்கும் இந்தப் போராட்டத்தில், தமிழக விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கெடுத்து வருகிறார்கள். இப்போராட்டத்தில் பங்கெடுத்துவிட்டுத் திரும்பியிருக்கும் கூடலூர் விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான எம்.எஸ்.செல்வராஜிடம் இதுகுறித்துப் பேசினேன். அவரது பேட்டி:

இப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து எந்தெந்த விவசாய அமைப்புகள் பங்கேற்றிருக்கின்றன?

உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்னு சில அமைப்புகள் கலந்துக்கிட்டிருக்காங்க. யுத்வீர் சிங் தலைமையிலான அகில இந்திய சங்கத்தின் சார்பில் நாங்க கலந்துக்கிட்டோம். இதுக்கு முன்னால பாஜக அரசு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து அகில இந்திய அளவில் ‘பூமி அதிகார ஆந்தோலன்’னு ஒரு அமைப்பை உருவாக்கி போராடினோம். அந்தச் சட்டத்தை இன்றைக்கு வரைக்கும் அரசாங்கத்தால நிறைவேற்ற முடியலை. இப்ப இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருக்காங்க.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in