அரியணையைத் தக்கவைக்கப் போராடும் மம்தா... அஸ்திவாரத்தைக் குறிவைத்து அடிக்கும் பாஜக..!

அரியணையைத் தக்கவைக்கப் போராடும் மம்தா... அஸ்திவாரத்தைக் குறிவைத்து அடிக்கும் பாஜக..!

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், முடிந்தால் ஆட்சியைப் பிடிக்கவும் மெல்ல மெல்ல வியூகங்களை வகுத்துவரும் பாஜக, மேற்கு வங்கத்தில் உக்கிரமாக அடித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

வங்கத்தில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரதானமான இரண்டாவது கட்சி எனும் இடத்தை அடைவதுதான் பாஜகவின் முதலாவது திட்டம். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அடுத்த திட்டம் ஆட்சியைப் பிடிப்பதுதான். அந்த இலக்கை எட்டவே இந்த அதிரடி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸுக்கு வலுவான மாற்றாக உருவெடுக்கும் வலிமை பாஜகவுக்கு மட்டுமே இருக்கிறது என்பதால்தான், அக்கட்சியிலிருந்து பலரும் பாஜகவுக்குப் படையெடுத்துவருகிறார்கள். மம்தா பானர்ஜி நேரடியாக பாஜகவை மட்டும் குறிவைத்து பதிலடி கொடுத்துக்கொண்டிருப்பதும் இந்த இருமுனை யுத்தத்துக்கு அத்தாட்சி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in