திமுகவை இந்துக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்!- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

திமுகவை இந்துக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்!- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்கள் எல்லாம் இருக்கும்போது, தேர்தல் நெருக்கத்தில் புதுமுகமான எல்.முருகனை பாஜக தலைவராக நியமிக்கிறார்களே என்று கவலைப்பட்ட, பாஜகவினர் இப்போது பெருமைப்படுகிறார்கள். திராவிடக் கட்சிகளின் தலைவர்களுக்கு நிகராக சுறுசுறுப்பாக சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கிறார் முருகன். மாநிலந்தழுவிய வேல் யாத்திரையை முடித்த கையோடு, மதுரையில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி' பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் முருகன். பரபரப்பான பயணத்தின் இடையே அவரைச் சந்தித்தோம்.

எப்படியிருந்தது வேல் யாத்திரை அனுபவம்... உங்கள் எண்ணம் ஈடேறியதா?

மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது வேல் யாத்திரை. நாங்கள் அமைப்பு ரீதியாகப் பலமாக இருக்கிற கோவை, சேலம் பகுதிகளில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு யாத்திரையில் பங்கேற்றார்கள். குறிப்பாக, இங்கே எல்லாம் பாஜக என்றொரு கட்சி இருக்கிறதா என்று எதிர்க்கட்சியினர் கேலி செய்த கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளிலும்கூட, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள். இந்துக் கடவுள், தமிழ்க் கடவுளை இழிவுபடுத்துகிற திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும், தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள், பட்டியலினத்தவர்கள், விவசாயிகள் எல்லாம் பாஜகவுடன் நெருங்கிவர இந்த யாத்திரை உதவியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in