அரசை விமர்சிக்க பாஜகவுக்கு அனைத்துச் சுதந்திரமும் உண்டு!- வானதி சீனிவாசன் காட்டம்

அரசை விமர்சிக்க பாஜகவுக்கு அனைத்துச் சுதந்திரமும் உண்டு!- வானதி சீனிவாசன் காட்டம்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

ஒவ்வொரு நாளும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதிலும், ஊடக விவாதங்களுக்குத் தீனி போடுவதிலும் தமிழக பாஜகவுக்கு நிகராக வேறு கட்சியே இல்லை எனலாம். ஒருபக்கம் கூட்டணித் தோழனான அதிமுகவுடன் மோதல், மற்றொரு பக்கம் உட்கட்சிப் பிரச்சினைகள் என்று பரபரப்பாகவே இருக்கிறது பாஜக. இந்தச் சூழலில், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசனுடன் ஒரு பேட்டி:

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் ஒன்று சொல்கிறார். அதை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக ஆட்சேபித்து வேறொன்று சொல்கிறார். கூட்டணிக்குள் என்ன குழப்பம்?

தனித்தனி நடைமுறை, கொள்கைகளின் அடிப்படையில் கட்சிகள் முரண்படும்போது விமர்சனங்கள் வருகின்றன. எட்டுவழிச் சாலை திட்டத்தில் பாஜக, அதிமுக நிலைப்பாடுகள் வேறு வேறு. இப்படி பல உதாரணங்கள் உண்டு. குமரியில், எஸ்.ஐ-யான வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில், மத அடிப்படைவாதிகள் தொடர்ந்து தமிழகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in