ஸ்டாலினைப் பார்க்கவே பாவமாக இருக்குய்யா..!- செல்லூர் ராஜூ சீரியஸ் பேட்டி

ஸ்டாலினைப் பார்க்கவே பாவமாக இருக்குய்யா..!- செல்லூர் ராஜூ சீரியஸ் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

இவர் சசிகலா அணியா, எடப்பாடி அணியா என்று ஊகிக்கவே முடியாத ஒருவர், தொடர்ந்து 9 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கிறார் என்றால் அது அமைச்சர் செல்லூர் ராஜூ தான். கூட்டுறவுத் துறைக்கு அமைச்சராக இருந்தாலும்கூட பல அரிய அறிவியல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். அவரைச் சந்திக்க மதுரையில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்குப் போனால், அலுவலகத்துக்குள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இருந்தனவே தவிர, மருந்துக்குக் கூட எடப்பாடியாரின் படம் இல்லை. வழக்கமாக நகைச்சுவையாகப் பேசுபவர், வேட்பாளர் நேர்காணலுக்குப் போகும் அவசரத்தில் இருந்ததாலோ என்னவோ ரொம்பவே சுருக்கமாகத்தான் பேசினார். இனி பேட்டி.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பின்னடைவைச் சந்தித்திருக்கிறதே?

பின்னடைவு எல்லாம் இல்ல. இதுவே பெரிய வெற்றிதான். தமிழ்நாட்ல அதிமுகவுக்கு செல்வாக்கே இல்ல, மக்கள் அதிருப்தியா இருக்காங்கன்னு சொன்ன நேரத்துல இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருப்பது கழகத் தொண்டர்களின் உழைப்பை மட்டுமல்ல, மக்கள் எங்கள் மேல வெச்சிருக்கிற நம்பிக்கையைக் காட்டுது. நாங்கள் இன்னும் கூட சிறப்பாகப் பணியாற்றி, எஞ்சியிருக்கிற பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்ல மாபெரும் வெற்றிபெறுவோம். அந்த வெற்றி 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும்.

Related Stories

No stories found.