எடப்பாடி பழனிசாமி என்னிடம் தோற்றதை இன்னும் மறக்கல!- திமுகவுக்கு வந்த ஈபிஎஸ் சகோதரர் விஸ்வநாதன்

எடப்பாடி பழனிசாமி என்னிடம் தோற்றதை இன்னும் மறக்கல!- திமுகவுக்கு வந்த ஈபிஎஸ் சகோதரர் விஸ்வநாதன்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

கடந்த வாரம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து பரபரப்பைக் கிளப்பினார் முதல்வர் பழனிசாமியின் சகோதரர் விஸ்வநாதன். “அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என்பதால் திமுகவில் இணைந்தேன்” என்று சொல்லி அரசியல் அரங்கை அதிரவைத்த விஸ்வநாதனைக் ‘காமதேனு’விற்காகச் சந்தித்தேன். பழனிசாமியின் பெரியம்மா மகனான விஸ்வநாதன், பார்க்க பழனிசாமியின் ஜாடையிலேயே இருக்கிறார். அலட்டல் இல்லாமல் பேசுகிறார்.

“பழனிசாமியோட தாத்தாவும் எங்க தாத்தாவும் அண்ணன் தம்பிகள். அவங்க அம்மாவும், எங்க அம்மாவும் அக்கா தங்கச்சிகள். சிலுவம்பாளையத்துல அவங்களுக்கும் எங்களுக்கும் பக்கத்துப் பக்கத்து வீடு” என்று சொல்லி பேட்டியைத் தொடங்கினார்.
    
முதல்வரோட சகோதரர் நீங்க. திடீர்னு திமுக பக்கம் போனது ஏன்?

இது திடீர்னு எடுத்த முடிவு இல்லை. பழைய சம்பவங்களைச் சொல்றேன், கேளுங்க. ஆரம்பத்துல காங்கிரஸ்ல இருந்தேன். 1986 நெடுங்குளம் ஊராட்சித் தலைவர் தேர்தல்ல சுயேச்சையா போட்டியிட்டு ஜெயிச்சேன். என்னை எதிர்த்து அதிமுக சார்புல போட்டியிட்டுத் தோத்துப்போனவர் இன்றைய முதல்வர் பழனிசாமி. என்னை ஜெயிக்க என்னென்னமோ செஞ்சு பார்த்தும் அவருக்குத் தோல்விதான் கிடைச்சுது. அப்புறம் முன்னாள் அமைச்சர் ஈரோடு முத்துசாமி முன்னிலையில அதிமுகவுல சேர்ந்தேன். அந்தச் சமயத்துல ஜெ, ஜா அணின்னு அதிமுக பிரிஞ்சிருந்தது. பழனிசாமி ஜெ அணியில சேவல் சின்னத்துல போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இடையில் எங்க ஊராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கானதா மாறிடுச்சு. அதனால நான் போட்டி போட முடியலை. அதுக்கப்புறம் 2011-ல, போட்டியிட்டு ஜெயிச்சு மறுபடியும் ஊராட்சி மன்றத் தலைவரா ஆனேன். அதுலயும் நிறைய கசப்பு. நான் தலைவரா ஆகக்கூடாதுன்னு என்னென்னவோ செஞ்சாங்க. அதுக்கப்புறம் 2016-ல, உள்ளாட்சித் தேர்தலுக்கு அறிவிப்பு வந்தப்ப நான் மனுத் தாக்கல் பண்ணினேன். அதுக்குப் பழனிசாமி போட்டி வேட்பாளரா மாதேஸ்வரன்னு ஒருத்தரை இறக்கினார். அதுல மோதல் இன்னும் பெரிசா ஆச்சு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in