பொள்ளாச்சியிலும் நான்கு என்கவுன்ட்டர் பாக்கி இருக்கு!- விளாசும் விஜயதரணி எம்.எல்.ஏ.

பொள்ளாச்சியிலும் நான்கு என்கவுன்ட்டர் பாக்கி இருக்கு!- விளாசும் விஜயதரணி எம்.எல்.ஏ.

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய முகங்களில் ஒருவரும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான விஜயதரணி எம்.எல். ஏ. மனதில் தோன்றுவதைப் பளிச்செனப் பேசுபவர். அதுபடியே தற்போது  பாலியல் குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா என்கவுன்ட்டரை ஆதரித்துப் பேசிவரும் விஜயதரணி, “இதைக் குறை சொல்பவர்கள் மீது கல்லெறிய வேண்டும்” என்றும் ஆவேசம் காட்டியிருக்கிறார். என்கவுன்ட்டரை எதிர்த்து திமுக எம்பி-யான கனிமொழி கருத்துச் சொல்லி இருக்கும் நிலையில், “கனிமொழி மீது கல்லெறியச் சொல்கிறாரா விஜயதரணி?” என்று சமூக ஊடகங்களில் சிலர் சிண்டுமுடிகிறார்கள். இது குறித்தெல்லாம் பேசுவதற்காக விஜயதரணியைச் சந்தித்தேன்.

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை வழக்கறிஞரான நீங்கள்  இவ்வளவு தீவிரமாக வரவேற்க என்ன காரணம்?

அந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் காவல் துறையைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோதுதான் என்கவுன்ட்டர் நடந்துள்ளது. இது சட்டத்தில் காவல் துறைக்கு அனுமதிக்கப்பட்டதுதான். அதேநேரம், நீதித் துறை வழங்காத நீதியை இறைவனே காவல் துறை மூலமாக வழங்கிய சம்பவமாக இது நடந்திருக்கிறது. அதனால் இந்த என்கவுன்ட்டரைப் பாராட்டத்தான் வேண்டும். நீதிக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கிற நிர்பயா வழக்கை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த வழக்கில் உடனடியாக நீதி கிடைத்திருக்கிறது என்று மக்கள் வரவேற்கிறார்கள். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகத்தான் பார்க்கப்படும் என்ற வாதத்தை முன்வைத்து சட்டத் துறை தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in