தலைக்கு மேல் பறக்கும் தங்கம் - எகிறும் விலை... ஏங்கும் மக்கள்

தலைக்கு மேல் பறக்கும் தங்கம் - எகிறும் விலை... ஏங்கும் மக்கள்

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

கடந்த சில மாதங்களாகவே படிப்படியாக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை, ஒருகட்டத்தில் மளமளவென அதிகரித்து சவரனுக்கு 28,000 ரூபாயைத் தாண்டியிருக்கிறது. ஆண்டு இறுதியில் இது 40,000 ரூபாயைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று செய்திகள் வருகின்றன. 

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரே தங்கத்தின் விலையேற்றத்துக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதற்கிடையே, தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் நடுவில், ‘விட்டால் விலையேறிக்கொண்டே இருக்கும். இப்போதே வாங்கிப் போட்டுவிடலாம்’ என்று தங்கத்தை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள்.

இப்படியான சூழலில் தங்கத்தை வாங்குவது சரியா, அப்படியே வாங்கினாலும் நகைகளாக வாங்குவதா அல்லது வேறு வடிவங்களில் வாங்குவதா, தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் பொருளாதார நிபுணரும், முதலீட்டு ஆலோசகருமான முனைவர் கௌரி ராமச்சந்திரன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in