மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி... அவ்வளவுதானா?- பதில் சொல்கிறார் பாமக பாலு

மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி... அவ்வளவுதானா?- பதில் சொல்கிறார் பாமக பாலு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பாமக நிறுவனர் ராமதாஸின் 80-வது பிறந்த நாளை முத்து விழாவாகக் கொண்டாடும் முனைப்பில் அக்கட்சியினர் மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கி, கட்சிக் கொடியில் பட்டியலின சமூகத்தினரைக் குறிக்கும் நீல நிறத்தையும் சேருங்கள் என்று ஆரம்ப காலத்தில் யோசனை சொன்னவர்கள் வரையில் அத்தனை பேரையும் தேடித்தேடி அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் விழாக் குழுவைச் சேர்ந்தவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.பாலுவுடன் ஒரு பேட்டி.

ராமதாஸ் முத்து விழாவுக்கு அரசியல் முக்கியத்துவம் உண்டா?

பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து வருபவர் மருத்துவர் அய்யா. இப்போது அவருக்கு 80 வயது பூர்த்தியாகிறது. இம்முறை தவிர்க்கவே கூடாது என்று வற்புறுத்தினோம். அப்படியானால் பொதுவாழ்வுக்கு வந்தது தொடங்கி, போராட்டங்கள், செயல்பாடுகளில் தன்னோடு தோள் கொடுத்தவர்கள், உடன் பயணித்தவர்கள், முரண்பட்டு மாற்று இயக்கங்களுக்குச் சென்றவர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் மீண்டும் சந்திக்கிற ஒரு நிகழ்வாக இருக்கட்டும் என்ற விருப்பத்தை அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்தச் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். சென்னை திருவொற்றியூரில், ஜூலை 25-ம் தேதி நடைபெறுகிற இந்த விழாவுக்கு வரும்படி மாற்றுக்கட்சியினருக்கும் அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இடஒதுக்கீடு போராட்டங்
கள் நடந்தபோது அதில் பங்கேற்ற பலருக்கு வயதாகிவிட்டது, சிலர் மறைந்துவிட்டார்கள். இந்நிலையில், இன்றைய தலை
முறையினரும் அய்யாவின் போர்க்குணத்தையும், அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்வதற்கு இந்த விழா ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in