
எஸ்.சுமன்
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்திருப்பது இந்திய ராஜதந்திரத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பதில் சந்தேகமேயில்லை. அதே சமயம், அதைத் தங்கள் வெற்றியாக முன்வைக்க பாஜக தலைவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. காரணம், பழைய வரலாற்றைத் தூசுதட்டி காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் கொடுத்துவரும் குடைச்சல்கள்.
“சிறையிலிருந்த அசாரை விடுவித்ததே பாஜக அரசுதான். பாஜக ஆட்சிக் காலத்தில்தான் மசூத் அசாரின் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன” என்று காங்கிரஸ் அடுத்தடுத்து அஸ்திரங்களை வீசி வருகிறது.
பயங்கரவாதியான படிப்பாளி