தில்லு காட்டும் தீதி மிரட்டும் திரிணமூல்... மிரளும் பாஜக!

தில்லு காட்டும் தீதி மிரட்டும் திரிணமூல்... மிரளும் பாஜக!

வெ.சந்திரமோகன்

“தோல்வி பயம்தீதியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. தீதி! எந்த வங்க மக்கள் உங்களுக்குப் பேராதரவு தந்து பதவியில் அமர்த்தினார்களோ அதே வங்க மக்கள் உங்களைப் பதவியிலிருந்து அகற்றக் காத்திருக்கிறார்கள். எண்ணிக்கொள்ளுங்கள் உங்கள் நாட்களை!” என்று சூளுரைத்திருக்கிறார் மோடி.

சமீபத்தில் கொல்கத்தாவில் அமித் ஷா பேரணியில் நடந்த கலவரத்துக்கு மம்தாதான் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது பாஜக. இதற்கு, “பொய்யரே! வெட்கமாக இல்லை? உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை முன்வையுங்கள். இல்லையென்றால் உங்களை சிறையில் தள்ளுவோம்” என்று சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

இந்தத் தேர்தலில் பாஜக பல இடங்களில் மாநிலக் கட்சிகளுடன் மோதினாலும், நேரடியான மோதல் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடன்தான் என்பதில் சந்தேகமில்லை. பல தொகுதிகளில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையில்தான் கடும் போட்டி. மக்களவைத் தேர்தலின் கிளைமாக்ஸில் மோடிக்கும் மம்தாவுக்கும் இடையில் நடந்த அனல் பறக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in