இலங்கையை மட்டுமல்ல... இந்தியாவையும் சூழும் பேராபத்து!

இலங்கையை மட்டுமல்ல... இந்தியாவையும் சூழும் பேராபத்து!

எஸ்.எஸ்.லெனின்

30 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த உள்நாட்டுப் போரின் பாதிப்புகளில் இருந்து மெல்ல மீண்டெழுந்து வந்த இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர் குண்டுவெடிப்புகள் குலைத்துப் போட்டுள்ளன. சுமார் 359 உயிர்களை பலி கொண்டதுடன்  500-க்கும் மேற்பட்டவர்களைச் சிதைத்து சிகிச்சையில் போட்டிருக்கிறது ஏசுபிரான் உயிர்த்தெழுந்த நாளில் நடந்த இந்தக் கொடூரம்!

கலங்கி நிற்கும் இலங்கை

அழகான கடற்கரைகள் நிறைந்த தீவு தேசமான இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து அமைதி திரும்பியதிலிருந்தே சர்வதேச சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். அவர்கள் நிறைந்திருந்த நட்சத்திர விடுதிகள், ஈஸ்டர் ஞாயிறை முன்னிட்டு பிரார்த்தனைக்காகக் கிறிஸ்துவர்கள் குவிந்திருந்த தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள் தீவிரவாதிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in