இப்படித்தான் வாக்களிக்கிறது இந்தியா!- கிழக்கு

இப்படித்தான் வாக்களிக்கிறது இந்தியா!- கிழக்கு

தம்பி

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான ஒடிஸா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய நான்கும் வரலாற்று ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு அறிவிக்கப்படும்போது அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுமென்றால் அதற்கு இந்த மாநிலங்களும் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும்!

ஒடிஸா

அசோகர் காலத்தில் கலிங்கம் என்று அறியப்பட்ட இந்தப் பகுதியைப் பற்றி தமிழில் ‘கலிங்கத்துப் பரணி’ என்று இலக்கியம் பாடப்பட்டுள்ளது. அசோகர் போரை விடுத்து பௌத்த மார்க்கத்தை நோக்கிச் சென்றது இங்கேதான். ஆங்கிலேயர் காலத்தில் ஒரிஸ்ஸா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். மிகச் சமீபத்தில் இதன் பெயர் ஒடிஸா என்று மாற்றப்பட்டது. இந்த மாநிலத்தின் மொழி ஒடியா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in