செவிகளை கூட்டத்தின் பக்கம் திருப்பக் கூடாது!- ஜோதி விஜயகுமார் சொல்லும் ரகசியம்

செவிகளை கூட்டத்தின் பக்கம் திருப்பக் கூடாது!- ஜோதி விஜயகுமார் சொல்லும் ரகசியம்

என்.சுவாமிநாதன்

மொழிபெயர்ப்பு என்பது வெறுமனே வார்த்தைகள் சார்ந்தது மட்டுமல்ல. அது ஒரு அழகிய கலை. இந்தத் தேர்தலில் மொழிபெயர்க்கக் கிளம்பிய பலரும் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சை போட்டி போட்டுக்கொண்டு சொதப்பி எடுத்தார்கள். அப்படியானவர்களுக்கு மத்தியில் தனது வசீகரமான மொழிபெயர்ப்புத் திறமையால் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தார் ஜோதி விஜயகுமார்.

கேரள காங்கிரஸ் கட்சிப் பிரமுகரான விஜயகுமாரின் மகள்தான் இந்த ஜோதி. கடந்த ஆண்டு செங்கனூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வாய்ப்பை இழந்தவர் விஜயகுமார். அவரது மகள் ஜோதி இப்போது தனது மொழிபெயர்ப்பு திறத்தால் கேரள காங்கிரஸ் வட்டாரத்தில் கவனிக்கப்படும் பிரஜையாகி இருக்கிறார். தங்கபாலு, பி.ஜெ.குரியன் ஆகியோரது மொழிபெயர்ப்பு ‘திறமை’களை வைத்து மீம்ஸ் போட்டவர்கள் எல்லாம் இப்போது ஜோதியைக் கொண்டாடுகிறார்கள்.

“காங்கிரஸ் கட்சி பாஜக, ஆர்எஸ்எஸ்ஐ எதிர்க்கிறது” என ராகுல் பேசியதை, “காங்கிரஸ் கட்சி, பாஜகவையும் கம்யூனிஸ்ட்டையும் எதிர்க்கிறது” என மொழியாக்கம் செய்தார் குரியன். வயநாட்டில் வந்து இறங்கிய போதே, “கம்யூனிஸ்ட்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மாட்டேன்” என ராகுல் தெரிவித்தார். இந்த நிலையில், குரியன் இப்படி தேரை இழுத்து தெருவில் விட்டார். இதனால் மிரண்டுபோன காங்கிரஸ்காரர்கள் கடைசியாக ஜோதி விஜயகுமாரைக் கண்டுபிடித்தார்கள். மொழிபெயர்ப்பு தந்த அங்கீகாரத்தால் ஏக உற்சாகத்தில் இருந்த ஜோதியை செங்கனூரில் காங்கிரஸ் தேர்தல் காரியாலயத்தில் சந்தித்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in