ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!- களத்திலிருந்து கனிமொழி பேட்டி

ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!- களத்திலிருந்து கனிமொழி பேட்டி

என்.சுவாமிநாதன்

அண்ணன் ஸ்டாலின், தன்னை தனது தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசியதில் நெகிழ்ந்துபோய் இருக்கிறார் கனிமொழி. அவர் மாத்திரமல்ல... பிரச்சார மேடையில் அண்ணனும் தங்கையும் உணர்ச்சிப் பிழம்பானதைப் பார்த்து தூத்துக்குடி தொகுதி திமுகவே இளகித்தான் போனது. அண்ணன் தந்த உற்சாகத்தில் தொகுதிக்குள் கூடுதல் எனர்ஜியுடன் ஓடிக்கொண்டிருந்த கனிமொழியை காமதேனு இதழுக்காக சந்தித்துப் பேசினோம்.

தேர்தலில் முக்கியமாக எதை முன்னிறுத்தி பரப்புரை செய்கிறீர்கள்?

மத்திய பாஜக அரசு கடந்த ஐந்தாண்டு காலமாகத் தமிழகத்தை அனைத்து வகையிலும் புறக்கணித்து, பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியுள்ளது. சமூகநீதியை சிதைத்துக்கொண்டிருக்கிறது. வரலாறு காணாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பலமாக பேணப்பட்டுவந்த மதநல்லிணக்கத்தையே சிதைத்து விட்டது. இவ்வளவு ஏன், அடிப்படை உரிமைகளுக்கே அச்சுறுத்தல் உண்டாக்கி பாசிச நிலையை உருவாக்கியுள்ளது. இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்கிறேன். கூடவே, எங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் மக்கள் நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தியும் பிரச்சாரம் செய்கிறேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in