பாஜகவுக்கு வேட்டு... காங்கிரஸுடன் கூட்டு!- இரட்டை பரீட்சைக்கு தயாராகும் நாயுடு

பாஜகவுக்கு வேட்டு... காங்கிரஸுடன் கூட்டு!- இரட்டை பரீட்சைக்கு தயாராகும் நாயுடு

என். மகேஷ்குமார்

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ல், ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

மாநிலத்தை ஆளும் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி மீதான மக்களின் மதிப்பீடு, ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் எதிர்காலம், நடிகர் பவன் கல்யாணின் அரசியல் என்ட்ரி இத்தனைக்கும் இந்தத் தேர்தல் பதில் சொல்லப் போகிறது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது எழுந்த கடும் எதிர்ப்புகளால் காங்கிரஸ் என்ற கட்சியே ஆந்திரத் தில் கிட்டத்தட்ட காணாமல் போனது. ஆந்திரத்தில் தன்னை மீண்டும் வலுப்படுத்திக்கொள்வதற்காக இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுடன் மறைமுக கூட்டு வைத்திருக்கும் காங்கிரஸ், “ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம்” என்ற வாக்குறுதியை முன்னெடுக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in