லேடிக்கு நாலு... மோடிக்கு மூணு!- கோவைக்கு பாஜக போடும் கணக்கு...

லேடிக்கு நாலு... மோடிக்கு மூணு!- கோவைக்கு பாஜக போடும் கணக்கு...

கா.சு.வேலாயுதன்

தனக்கு இரண்டு முறை மகுடம் சூட்டிய கோவையில் இந்த முறையும் நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறது பாஜக. கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சிபிஆர் எனும் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதால் கோவைக்கும் விஐபி அந்தஸ்து!

கோவையில் இதுவரை நான்கு முறை போட்டியிட்டு இரண்டு முறை வென்றவர் சிபிஆர். அதேபோல் திமுக கூட்டணியில் இவரை எதிர்த்து நிற்கும்  சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனும் மூன்று முறை போட்டியிட்டு ஒருமுறை வென்றவர். தினகரன் நிறுத்தியிருக்கும் அப்பாதுரை அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வழிமாறி மீண்டும் அமமுகவுக்கு தடம் மாறியவர். ஆக, இங்கு நேரடி போட்டி சிபிஆருக்கும் நடராஜனுக்கும் தான்.

கடந்த தேர்தலில் இங்கே லேடிக்கு (அதிமுக) சுமார் 4 லட்சத்து முப்பதாயிரம் வாக்குகளும்  மோடிக்கு சுமார் 3 லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளும் கிடைத்தன. இது இரண்டையும் கூட்டினாலே எட்டு லட்சம் வாக்குகளுக்கு மேல் வருகிறது. ஆனால், கடந்த முறை காங்கிரஸ், திமுக, சிபிஎம் வாங்கிய மொத்த ஓட்டுகளைக்  கூட்டினாலே சுமார் மூன்று லட்சம்தான் வருகிறது. இந்தக் கணக்கை வைத்துத்தான்   ‘வெற்றி நமதே’ என்கிறது பாஜக. இந்தத் தொகுதி நிச்சயம் பாஜகவுக்குத்தான் போகும் என்று முன்கூட்டியே தெரிந்ததால், தொகுதி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற அதிருப்தி எதுவும் அதிமுகவுக்குள் இல்லை. “ பூத் கமிட்டி எல்லாம் அமைச்சு பக்காவா வெச்சிருக்கோம்... சிபிஆர் ஏதாச்சும் தந்தா போதும்” என்ற பேச்சு அதிமுக வட்டாரத்தில் சரளமாக உருள்கிறது. “ஓட்டுக்குப் பணம் நிச்சயம் இல்லை” என்று அதிமுகவினருக்கு உறுதிப்படவே தெளிவுபடுத்திவிட்டது சிபிஆர் தரப்பு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in