வலுக்கும் எதிர்ப்புகள்...எதிர்ப்புகள்... பிரியும் வாக்குகள்!- தென்காசியில் தேறுவாரா கிருஷ்ணசாமி?

வலுக்கும் எதிர்ப்புகள்...எதிர்ப்புகள்... பிரியும் வாக்குகள்!- தென்காசியில் தேறுவாரா கிருஷ்ணசாமி?

என்.சுவாமிநாதன்

தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் இனத்திலிருந்து விடுவிக்கப் போராடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இங்கே சாதி ஓட்டுகள் சாதகமாக இருந்தாலும் அதிமுக வேட்பாளர் களத்தில் இல்லையே என்ற ஆதங்கத்தில் அதிமுக ஓட்டுகள் கணிசமாக அமமுக பக்கம் திரும்புவது டாக்டருக்கே  ஆரம்பமே ‘இனிமா’ கொடுக்கிறது.

தென்காசியில் ஒருமுறைகூட சூரியன் உதித்ததில்லை. இந்த நிலையில், 28 ஆண்டுகள் கழித்து இங்கு நேரடியாகக் களத்துக்கு வந்திருக்கிறது திமுக. காங்கிரஸின் வாக்கு வங்கியும் சிறுபான்மையினர் ஓட்டுகளும் தங்களைக் கரை சேர்க்காதா என்ற நம்பிக்கை திமுகவுக்கு! அதிமுக, பாஜக, தேமுதிக வாக்குகளோடு தனக்கான தனிப்பட்ட செல்வாக்கும் தன்னை நிச்சயம் கைதூக்கிவிடும் என்ற மனக்கணக்கு மருத்துவருக்கு!

இந்தத் தொகுதியில் கிருஷ்ணசாமிக்கென எப்போதும் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் ரிசர்வில் இருக்கும். கடந்த 2004, 2009 தேர்தல்களில் தனித்து நின்று இதை அவர் நிரூபித்தும் இருக்கிறார். அதிமுகவுக்கு முன்னதாகவே வெளிப்படையாக பாஜக ஆதரவு நிலையை எடுத்துவிட்ட கிருஷ்ணசாமி, நீட் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் பாஜகவின் ஊதுகுழலாய் நின்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in