அன்புமணியை மிரட்டும் அமமுக!- தருமபுரியில் மீண்டும் மாங்கனி மணக்குமா?

அன்புமணியை மிரட்டும் அமமுக!- தருமபுரியில் மீண்டும் மாங்கனி மணக்குமா?

எஸ்.ராஜாசெல்லம்

ஏழு தொகுதிகளில் போட்டியிட்டாலும் தருமபுரி தொகுதியை முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாமக. காரணம், கட்சியின் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் இங்கே மீண்டும் களம் காண்பது!

இதுவரை பாமக நான்கு முறை வென்ற தொகுதி இது. இப்போதும் இங்கு அன்புமணிதான் எம்பி. கடந்த முறை கூட்டணி பலம் இல்லாமலே இந்தத் தொகுதியை வென்றெடுத்த அன்புமணி, இந்த முறை அதிமுக கூட்டணி தன்னை மீண்டும் டெல்லிக்கு அனுப்பும் எனப் பெரிதும் நம்பி களத்தில் நிற்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய - மாநில அரசுகளுடன் பெரிதாக இணக்கம் இல்லாத நிலையிலும் தருமபுரி தொகுதியில் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைத்திருப்பது பாமகவை பேசவைக்கிறது. என்றாலும் “இதெல்லாம் எம்பி செய்ய வேண்டிய காரியங்களா?” என்ற கேள்வியும் எழுகிறது. தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மொரப்பூர் - தருமபுரி இணைப்பு ரயில்பாதை திட்டம் அன்பு மணி முயற்சியால் கை கூடியிருக்கிறது. ஆனாலும் இதையும் “தேர்தலுக்காக பாஜக அரசு செய்திருக்கும் ஜாலம்” என்கிறது எதிரணி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in