வசந்தகுமார், தமிழிசை: வாகை யாருக்கு?- - குமரி அனந்தனின் பாசமான பதில்!

வசந்தகுமார், தமிழிசை: வாகை யாருக்கு?- - குமரி அனந்தனின் பாசமான பதில்!

கே.கே.மகேஷ்

காமராஜரோடு இணைந்து பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு இப்போது 86 வயது. “பனை மரத்தை பாதுகாக்க வேண்டும்; புதுச்சேரி மாந்தோப்பை, பாரதியின் குயில் தோப்பாக மாற்ற வேண்டும்; தர்மபுரியில் பாரத மாதாவுக்கு கோயில் கட்டவேண்டும்; நதிகளை இணைக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளுக்காக வைகோவை விட அதிகமாக பாதயாத்திரை போன தலைவர், இப்போது ஓய்வில் இருக்கிறார். தன் மகளும், தம்பியும் நேரெதிர் தேசிய கட்சிளின் வேட்பாளர்களாகப் போட்டியிடும் நிலையில், அவருடன் ஒரு பேட்டி.

காங்கிரஸ், பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?

அண்மையில் நடந்த தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி வெற்றி பெறுவதற்கு, காங்கிரஸ் ஒற்றுமைப்படுத்துகிற சக்தியாக இருப்பதும், பாஜக பிரிவினை முழக்கத்தை முன் வைப்பதும்தான் காரணம். “இந்தியா இந்து நாடாக மாறுவதை நான் ஏற்க மாட்டேன்” என்றவர் காந்தி மகான். அதனால் அவருடைய பிரார்த்தனையில், “ரகுபதி ராகவ ராஜாராம்! பதீத பாவன சீதாராம்!” என்ற பாடலில், “ஈஸ்வர அல்லா தேரே நாம்! சப்கோ சன்மதி தே பகவான்!” என்ற வரிகளையும் சேர்த்துப் பாடினார். அதற்கு, “ஈஸ்வரன், அல்லா, பரமபிதா எல்லாரும் ஒருவர்தான் என்ற நல்ல புத்தியை சகலருக்கும் கொடு இறைவா” என்று அர்த்தம். இப்படி தேசபக்திப் பாடலுக்கு இணையாக தேச ஒற்றுமை, மத ஒற்றுமைப் பாடலைப் பாடிய தேசத்தில், மத அரசியலை செய்வது துரதிர்ஷ்டமானது. அந்த காந்தியையும், நேருவையும் அவமதித்துப் பேசுவது, ரூபாய் நோட்டில் இருந்தே காந்தியின் படத்தை நீக்க முயல்வது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி பிரிவினை மனப்பான்மையும், ஒற்றுமையைக் குலைக்கும் எண்ணத்தையும் கொண்ட ஒரு சக்தியை இந்திய மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள். எனவே, காந்திய வழியில் ஒற்றுமையை வலியுறுத்தி, வெறுப்பில்லாமல் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மாதிரியானவர்களின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இமயத்தில் இருந்து குமரி வரையில் கூட ஒரு புதிய மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in