வேண்டும் மோடி... வேண்டாம் நித்தி- ‘அப்டேட்’ ஆதீனத்தின் அடேங்கப்பா பேட்டி

வேண்டும் மோடி... வேண்டாம் நித்தி- ‘அப்டேட்’ ஆதீனத்தின் அடேங்கப்பா பேட்டி

கே.கே.மகேஷ்

ரஜினி வாய்ஸ் கொடுக்கிறாரோ இல்லையோ, இப்போதெல்லாம் தேர்தலுக்குத் தேர்தல் மதுரை ஆதீனம் வாய்ஸ் கொடுக்கத் தவறுவதில்லை. இப்போது, ‘மீண்டும் மோடி’ என்ற கோஷத்தோடு களமிறங்கியிருக்கிறார். சந்நிதானத்தை வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டேன். “பூஜை முடித்துவிட்டுத் தெரிவிக்கிறேன் மகேஷ். ஆசீர்வாதம்” என்று பதில் அனுப்பினார். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆதீனத்துக்குள் நுழைந்த எனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. கையில் ஐபோன், தனது சிம்மாசனத்துக்கு அருகே கேரவன் ரேடியோ, எதிரே திருமண மேடையில் வைப்பது போன்ற ஃபிளாஷ் லைட், அம்பர்லா என... ஹைடெக்காக மாறியிருந்தது சந்நிதானத்தின் பேட்டி மண்டபம். பேட்டி தொடங்கியதும் ஆதீன மேலாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தார். “என்ன சந்நிதானம் இது...” என்று கேட்டேன். “எல்லாம் ஒரு சேஃப்டிக்காகத்தான். பயப்படாதீங்க; வெளியே போகாது” என்றார். அவர் சொன்னதை நம்பி பேட்டியை ஆரம்பித்தேன்.

புது போன், புது ரேடியோ கலக்குறீங்களே சந்நிதானம்?!

(மகிழ்ச்சியாக) தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கிறபோது மனிதன் என்பவன் தெய்வமாகிவிட்டான் என்றுதான் தோன்றுகிறது. இந்த ‘கர்வான்’ (ரேடியோ) பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? மொத்தம் 5 ஆயிரம் பாடல்களை இதிலேயே பதிவு செஞ்சு வெச்சிருக்காங்க. எஃப்எம், யுஎஸ்பி போர்ட், ப்ளு டூத் எல்லாம் இருக்கு. அதனால செல்போனில் பார்க்கிற வீடியோ, பாடலைக்கூட இந்த ரேடியோ ஸ்பீக்கரில் சத்தமாக ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். தமிழின் எல்லா முக்கிய இசையமைப்பாளர்களின் இசையும் இதில் இருக்கு. பாடலின் துல்லியம், நுட்பம் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இது பிடிக்கும். நாமே இதுவரைக்கும் சுமார் 20 கேரவன்கள் வாங்கி, முக்கியமான பக்தர்களுக்குப் பரிசளித்திருக்கிறோம். (என்று சொன்னபடி, பாடல்களை வைத்துக் காட்டுகிறார்.) நமக்கு இசையில் ஆர்வம் அதிகம். ஷோகேஸில் மரபார்ந்த இசைக்கருவிகளுடன் சாக்‌ஷபோன், வயலின், டிஜிட்டல் கிதார் போன்றவற்றையும் காட்சிக்கு வைத்திருக்கிறேன். (என்றபடி டிஜிட்டல் கிதாரை இசைப்பது போல பாவனை செய்து காட்டினார்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in