மாற வேண்டியது ஆட்சி மட்டுமல்ல, தேர்தல் முறையும்தான்!

மாற வேண்டியது ஆட்சி மட்டுமல்ல, தேர்தல் முறையும்தான்!

சி.மகேந்திரன்

மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியை, காவிரி வடிநில விவசாயிகளுக்குப் பேரடி கொடுத்த கஜா புயலோடு ஒப்பிட்டுக் கூற முடியும். இனிமேல் வரப்போகும் ஆட்சிகூட, மோடி ஏற்படுத்திய அழிவுக்கு மருந்திட, நிவாரணம் கொடுக்கத்தான் முடியுமே தவிர, நேர்ந்த அழிவைச் சரிசெய்து மீண்டும் நாட்டை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்ல, இன்னும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். பணமதிப்பு நீக்கமும் ஜி.எஸ்.டி வரியும் இந்தியப் பொருளாதாரத்தில், சராசரி இந்திய மக்களின் வாழ்க்கையில் தந்த அடி அவ்வளவு மோசமானது.

புனிதப் பசுவின் உயிர் காக்க என்று கொல்லப்பட்ட அப்பாவி தலித், இஸ்லாமியச் சகோதர்களின் இந்தத் துயரத்தின் வேகம், கஜா புயல் சுழன்றடித்த வேகத்தைவிடக் குறைவானது அல்ல. பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்டு, அரசின் சிந்தனைப் போக்குக்கு எதிராக எழுதிய தபோல்கரும் பன்சாரியும் கல்புர்கியும் கவுரியும் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கருத்துரிமைக்கு எதிரான தேசியப் பேரிடர் என்றுதான் கூற முடிகிறது.

யார் காவலன்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in