ஆளுக்கு பத்து லிட்டர் பாண்டிச்சேரி சரக்கு!- சுயேச்சை வேட்பாளரின் டுமீல் வாக்குறுதி!

ஆளுக்கு பத்து லிட்டர் பாண்டிச்சேரி சரக்கு!- சுயேச்சை வேட்பாளரின் டுமீல் வாக்குறுதி!

இரா.கார்த்திகேயன்

பளபளக்கும் மஞ்சள் நிற ஜிகினா சட்டை, உதட்டில் லிப்ஸ்டிக், தலையில் கிராப் சகிதம் கரகாட்டக்காரன் ராமராஜன் கணக்காய், திருப்பூர் தொகுதியை வளப்படுத்த(!) சுயேச்சை வேட்பாளராக கடந்த வாரம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ஏ.எம்.சேக் தாவுத்!

இவர் வேட்பு மனு தாக்கல் செய்ததுகூட பெரிய செய்தியாகவில்லை. ஆனால், ‘வீட்டில் ஒரு ஆணுக்கு மாதம் தோறும் பத்து லிட்டர் சுத்தமான பாண்டிச்சேரி சரக்கு வழங்குவேன், பெண்களின் திருமணத்துக்கு பத்துப் பவுன் நகை வழங்க ஏற்பாடு செய்வேன், வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதம் 25,000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்வேன்...’ என இவர் எடுத்துவிட்ட வாக்குறுதிகள் சமூக வலைதளங்களில் வளைத்துக்கட்டி ட்ரெண்ட் ஆகின.

வேட்பு மனுவைத் தாக்கிவிட்டு களைத்துப்போய் உட்கார்ந்திருந்த சேக்தாவுத்தை ஓரங்கட்டி, “இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா..?” என்றேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in