கட்சிகளின் கள்ளக்குறிச்சி சேஸிங்!

கட்சிகளின் கள்ளக்குறிச்சி சேஸிங்!

கள்ளக்குறிச்சியில் நேரடியாகக் களமிறங்க திமுகவும் அதிமுகவும் பிரயாசைப்பட்டன. அதே சமயம் இரண்டு கூட்டணியிலுமே கூட்டணிக் கட்சிகளும் இந்தத் தொகுதிக்காகப் போட்டி போட்டன. கடைசியில் திமுகவின் உறுதியும் தேமுதிகவின் பிடிவாதமும் வென்றிருக்கிறது.

சேலம்  மாவட்டத்தின்  மூன்று  சட்டமன்றத்  தொகு திகளும கள்ளக்குறிச்சிக்குள் வருவதால் எடுத்த எடுப்பிலேயே எடப்பாடியார் இந்தத் தொகுதியை குறி வைத்தார். கள்ளக்குறிச்சிக்கு தனி மாவட்ட அந்தஸ்து கொடுத்ததும் இங்குள்ள பாமக, தேமுதிக கட்சிகளின் வலுவான வாக்கு வங்கியும் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்; இங்கே தனது மகன் மிதுனை நிறுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டார்.

ஆனால், ஓபிஎஸ்ஸின் மகனுக்கு தேனியில் சீட் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் தனது மகனுக்கும் வாய்ப்பளித்தால் கட்சிக்குள் வாரிசு சர்ச்சை வெடிக்கும் எனப் பயந்த எடப்பாடியார் மகனை நிறுத்தும் யோசனையை ஒத்திவைத்து விட்டாராம். அவர் ஒதுங்கியதும் தனது அண்ணன் ராதாகிருஷ்ணனுக்காக  இந்தத் தொகுதிக்குப் போராடினார் அமைச்சர் சி.வி.சண்முகம். சிட்டிங் எம்பியான காமராஜ் உள்ளிட்டவர்களும் கள்ளக்குறிச்சிக்காக தவம் கிடக்க, இன்னொரு பக்கம் தேமுதிகவும் பாமகவும் கள்ளக்குறிச்சிக்காக கச்சை கட்டின. ராமதாஸின் உறவினரும் முன்னாள் எம்பி-யுமான தன்ராஜுக்காக அதிமுக தலைமை யிடம் பேசியது பாமக.

ஆனால், அதிமுக கூட்டணியில் சீட்களைப் பெறுவதில் எத்தகைய பிடிவாதம் காட்டியதோ அதே பிடிவாதத்தை சுதீஷுக்காக கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றுவதிலும் காட்டியது தேமுதிக. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சுதீஷ் தனித்து நின்றே 1,32,223 வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலிலும் தேமுதிக இங்கே 1,64,183 வாக்குகளைப் பெற்றது. இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் கள்ளக்குறிச்சிக்குப் பிடிவாதம் காட்டியது தேமுதிக. இருப்பினும் இந்தத் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கவே விரும்பியது அதிமுக. இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. எதுவும் பலிக்கவில்லை என்றதும் டாக்டர் ராமதாஸே விஜயகாந்தைச் சந்தித்தார். ஆனாலும் பிரேமலதா பிடி கொடுக்க வில்லை. அடுத்து, முதல்வரே களத்தில் இறங்கி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in