கர்நாடகம் யார் கையில்? காங்கிரஸ் - மஜத கூட்டணியை கலவரப்படுத்தும் மாயாவதி!

கர்நாடகம் யார் கையில்? காங்கிரஸ் - மஜத கூட்டணியை கலவரப்படுத்தும் மாயாவதி!

இரா.வினோத்

பிற மாநிலங்களில் இப்போதுதான் பிரச்சாரம் தொடங்கியிருக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதே மக்களவைத் தேர்தல் பிரச்சாரமும் தொடங்கிவிட்டது. தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த கர்நாடகத்தை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி என வரிசையாக முற்றுகையிடுவதால் கர்நாடகத் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

கடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையற்ற, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததது பாஜக. கோவா பாணியில் அக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க 80 எம்எல்ஏக்களை வைத்திருந்த‌ காங்கிரஸ் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்தது. இதனால் 37 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருந்த குமார சாமி முதல்வர் ஆனார்.

இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட்டு மீண்டும் முதல்வராகத் துடிக்கிறார் எடியூரப்பா. “மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால் மீண்டும் நான்தான் முதல்வர்” என பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in