ஆயிரந்தான் இருந்தாலும் ஆ.ராசா மாதிரி வருமா?- நீலகிரி தொகுதி கள நிலவரம்

ஆயிரந்தான் இருந்தாலும் ஆ.ராசா மாதிரி வருமா?- நீலகிரி தொகுதி கள நிலவரம்

கா.சு.வேலாயுதன்

இதுவரை 8 முறை காங்கிரஸும், திமுகவும் அதிமுகவும் தலா இரண்டு முறையும், ஒருமுறை சுதந்திரா கட்சியும் வெற்றிவாகை சூடிய தொகுதி நீலகிரி. 2009-ல் இந்தத் தொகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டதால் திமுக கொள்கைபரப்புச் செயலாளர் ஆ.ராசா பெரம்பலூரிலிருந்து இங்கு வந்து போட்டியிட்டார். அந்த முறை வென்றவர், கடந்த முறை அதிமுக வேட்பாளரிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாகப் பேசப்பட்டதும் ராசாவின் இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம். இப்போதும் நீலகிரியை ராசாவுக்கே ஒதுக்கியிருக்கிறது திமுக.

நீலகிரியின் சிட்டிங் எம்பி-யான கோபாலகிருஷ்ணனைப் பற்றி கேட்டால், “அவர் எங்கிருக்கிறார்... ஓட்டு வாங்கிட்டுப் போனதோட சரி. இந்த அஞ்சு வருஷத்துல என்ன செஞ்சார்னு எங்களுக்கே தெரியல” என்று ஆதங்கக் குரல் எழுப்பும் மக்கள், “ஆயிரந்தான் இருந்தாலும் ஆ.ராசா மாதிரி வருமா?” என்று பெருமூச்செறியவும் செய்கிறார்கள்.

கூடலூரில் செக்‌ஷன் 17 நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு சாலை, மின்  வசதி கிடைக்க வனத்துறையின் சட்டதிட்டங்களைத் தளர்த்தியது, மூடப்படும் நிலையிலிருந்த ஊட்டி எச்பிஎஃப் தொழிற்சாலைக்கு 300 கோடி ரூபாய்  முன்பணம் பெற்றுத் தந்து ஆலை முடங்காமல் பார்த்தது, தேயிலை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க ஆவன செய்தது, பவானி 2 -வது திட்டம் மூலம் மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து தந்தது எனத் தனது பதவி காலத்தில் ஆ.ராசா செய்துகொடுத்த காரியங்கள் பலவும் சிட்டிங் எம்பி-யின் 5 ஆண்டு கால செயல்பாடுகளால் பேச வைக்கிறது. இதனால், ராசா மீது சுமத்தப்பட்ட 2 ஜி ஊழலைக்கூட மக்கள் இப்போது மறந்துவிட்டார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in