
கரு.முத்து
தனக்கு மிகவும் விருப்பமான சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக மீது பெருத்த நம்பிக்கை வைத்து மீண்டும் களமிறங்கி இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
காங்கிரஸுக்கு சாதகமான இந்தத் தொகுதியில், கனகசபை பிள்ளை, இளையபெருமாள், வள்ளல்பெருமான் என மொத்தம் ஆறு முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். திமுக நான்கு முறையும், பாமக மூன்று முறையும், அதிமுக இரண்டு முறையும் சிதம்பரத்தைக் கைப்பற்றியிருக்கின்றன. திருமாவளவனுக்கும் இந்தத் தொகுதியில் ஒரு முறை வென்று இருமுறை தோற்ற வரலாறு உண்டு!
திருமாவும் சிதம்பரமும்