விஜயகாந்தை வைத்து பிரேமலதா நடத்தும் நாடகம்!- சடசடக்கும் சந்திரகுமார்

விஜயகாந்தை வைத்து பிரேமலதா நடத்தும் நாடகம்!- சடசடக்கும் சந்திரகுமார்

கா.சு.வேலாயுதன்

“அக்கா, தம்பியின் சுயலாபத்துக்காக சுழலும் கம்பெனியாக தேமுதிகவை மாற்றிவிட்டார்கள். கட்சியைப் படுகுழியில் தள்ளுவதற்காகவே அதிமுக ‘கொடுத்ததை’ வாங்கிகொண்டு சைலன்ட் ஆகிவிட்டார்கள்” என்று தேமுதிகவினர் சத்தமாகப் பேசமுடியாமல் புழுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த தேர்தலின்போது கட்சியைவிட்டு வெளியேறி திமுகவில் இணைந்த தேமுதிக கொள்கைபரப்புச் செயலாளர் சந்திரகுமார் இதற்கு முந்தைய தேர்தல்களில் பிரேமலதாவும் சுதீஷும் நடத்திய கூட்டணி பேரங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இது தொடர்பாக காமதேனுவுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

தேமுதிகவுக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்த்தீர்களா?

இதில் எதிர்பார்க்க ஒன்றுமேயில்லை. ஏன்னா அவங்க இப்படி நடந்திருக்காம இருந்திருந்தால்தான் ஆச்சரியம். இப்ப கேப்டன் கையில் எதுவுமே இல்லை. அதிமுக நமக்கு 4 சீட் குடுத்துருக்கிற விவரம்கூட அவருக்கு சரியா தெரியுமான்னு தெரியல. அதை அக்காவும் தம்பியும் கூட்டணி பேசினது, சீட் வாங்கினது, அவரை பொம்மை மாதிரி உட்கார வச்சு போஸ் கொடுத்தது எல்லாமேதான் சொல்லுதே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in