இந்தத் தேர்தலுக்கு விதைப்பு... அடுத்த தேர்தலுக்கு அறுப்பு!- எண்ணத்தைச் சொல்லும் என்.பெரியசாமி மகன்

இந்தத் தேர்தலுக்கு விதைப்பு... அடுத்த தேர்தலுக்கு அறுப்பு!- எண்ணத்தைச் சொல்லும் என்.பெரியசாமி மகன்

என்.சுவாமிநாதன்

தேர்தல் திருவிழா வருகிறதென்றால் சிலர் தங்களது விலாசத்தையும் இருப்பையும் விசாலமாக்கப் புறப்பட்டுவிடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியிலிருந்து ராஜா புறப்பட்டிருக்கிறார். இந்த ராஜா வேறு யாருமல்ல... கருணாநிதியின் முரட்டு பக்தர் என்று வர்ணிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் என்.பெரியசாமியின் இளைய பிள்ளை!

முன்னாள் அமைச்சரான அக்கா கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எனப் பம்பரமாய் சுற்றிவர, தம்பி ராஜா கடந்த ஒன்றரை வருடமாக தனிக்கட்சி நடத்துகிறார்.

ராஜா நடத்தும் ‘நாம் இந்தியர் கட்சி’ இந்தத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடப் (அடேங்கப்பா!) போகிறதாம். நாம் இந்தியர் கட்சிக்கு தூத்துக்குடியில் பிரம்மாண்டமான அலுவலகம் இருக்கிறது. அங்கு கோட் சூட்டில் ஜம்மென்று அமர்ந்திருக்கிறார் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜா. அந்தக் கட்டிடத்தின் பின்புறத்தில் டிப்பர் லாரிகள் வரிசை பிடித்து நிற்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in