தீத்துவிட்ட மாப்ளய திரும்பக் கூட்டிட்டு வந்துருக்காங்க!- அதிமுக கூட்டணியைக் கலாய்க்கும் ஐ.லியோனி

தீத்துவிட்ட மாப்ளய திரும்பக் கூட்டிட்டு வந்துருக்காங்க!- அதிமுக கூட்டணியைக் கலாய்க்கும் ஐ.லியோனி

குள.சண்முகசுந்தரம்

அதிமுக-வுடன் கூட்டணி பேசிக்கொண்டே துரைமுருகனின் வீட்டுக்கதவை தேமுதிக தட்டியதற்கு மறுநாள் சென்னையில் திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, “தேமுதிகவோட நிலைமை இப்ப ரெண்டு வீட்டு நாயி கஞ்சிக்கு செத்த கதையா போச்சுங்க. கிராமங்கள்ல ரெண்டு வீட்டுக்காரங்க சேர்ந்து ஒரு நாயை வளர்ப்பான். அந்த நாய்க்கு இவன் சோறு வைப்பான்னு அவன் விட்டுருவான். அவன் சோறு வைப்பான்னு இவனும் கண்டுக்காம விட்டுருவான். கடைசியில அது ரெண்டு வீட்டுலயும் சோறு கெடைக்காம முச்சந்தியில செத்துக் கெடக்கும். இப்ப தேமுதிகவோட கதை அப்படித்தான் போயிட்டு இருக்கு” என்றார்.  யூ டியூபில் இந்த காமெடியைப் பார்த்துவிட்டு,  “இதேபோல அதிமுக கூட்டணியில இருக்கிற மத்த கட்சிகளைப் பத்தியும் உங்க பாணியில கொஞ்சம் கலாய்ங்க சார்” என்றேன் லியோனியிடம்.  ‘‘ ஒரு நாள் டயம் குடுங்க சார் ரெடியாகிக்கிர்றேன்” என்றவர், மறுநாள் சொன்ன நேரத்துக்கு லைனில் இருந்தார்.

அவரைப் பேசவிட்டு காது கொடுத்தேன்.  “அதிமுக கூட்டணியில சேர்ந்த பின்னாடி வலியப் போயி மீடியா மக்கள்கிட்ட மாட்டிக்கிட்ட அன்புமணிகிட்ட உங்க மக்கள் நல்லா வெக்கம் வரத்தான் கேள்விகளைக் கேட்டாங்க. அதுக்கு அவரு, “ரொம்ப நல்ல கேள்வி... குட் கொஸ் டின்’னு சொல்லிக்கிட்டே போனாரே தவிர ஒரு கேள்விக்கும் உருப்படியா பதில் வரலியே! இது எப்படி இருக்குன்னா, வகுப்புல சில சமயம் வாத்தியாருக்கே பதில் தெரியாத கேள்விகள பசங்க கேட்டுருவாங்க. அதுக்குப்பதில் தெரிஞ்சாதான சொல்றதுக்கு... அதை மறைக்கிறதுக்காக,  ‘டேய் அருமையான கேள்விடா... இப்புடித்தான் பட்டு பட்டுன்னு கேக்கணும். வெரிகுட்ரா தம்பி’ன்னு நாங்க அளந்துக்கிட்டே போவோம். அதைக் கேட்டு அந்தப் பையனும் அமைதியா உக்காந்துருவான். ஆனா, கடைசி வரைக்கும் அவன் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லி இருக்க மாட்டோம். அன்னைக்கி அன்புமணி அய்யாவ பார்த்தப்ப எனக்கு இதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு.

தங்களோட விருப்பத்துக்கு விரோதமா ராமதாஸ் அய்யா கூட்டணி அமைச்சது பாட்டாளி சொந்தங்களுக்கு பெருத்த ஏமாற்றமா போச்சு. இது எப்படினா... ரட்சகன் படத்துல நாய் கண்காட்சிக்கு எருமக் கன்னுக்குட்டிக்கு நாய் தோலைப் போர்த்தி கூட்டிட்டு வருவாரு நம்ம வைகைப் புயல். ஆனா, யாவாரம் முடியப் போற நேரத்துல அந்தக் கன்னுக்குட்டி கொதக்கிண்டு சாணியப் போட்டு ஆட்டையக் கலைச்சுடும். அப்படித்தான் ஆட்டையக் கலைச்சுட்டாரு அய்யா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in