தம்பிக்கு ஒரு ஸீட்!- பெரம்பலூரிலும் நேரு கொடி?

தம்பிக்கு ஒரு ஸீட்!- பெரம்பலூரிலும் நேரு கொடி?

கரு.முத்து

“திருச்சி திமுகவையே கோட்டைகட்டி ஆளும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இப்போது பெரம்பலூர் தொகுதியிலும் தன்வீட்டுக் கொடியை நாட்ட இடம் கிடைக்குமா என்று பார்க்கிறாரப்பா...” திருச்சி மண்டல திமுகவில் இப்போது இதுதான் பேச்சாகிக் கிடக்கிறது.

பெரம்பலூரின் சிட்டிங் எம்பி-யான மருதராஜாவுக்கு அதிமுக தலைமை இந்த முறை கை விரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி அந்த இடத்துக்கு வரலாம் என்கிறது அதிமுக வட்டாரம். எடப்பாடியாரை பெயர் சொல்லி ஒருமையில் அழைக்குமளவுக்கு அவரிடம் நெருக்கமாக இருக்கும் சிவபதியும் தலைமை தந்திருக்கும் நம்பிக்கையில் தேர்தல் வேலைகளில் மும்முரமாய் இருக்கிறார். தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் சிவபதி முக்கியத்துவம் பெறுகிறார்.

திமுகவைப் பொறுத்தவரை கடந்த வாரம் வரையில், துறையூர் பகுதியைச் சேர்ந்தவரும் கே.என்.நேருவின் விசுவாசியுமான மெடிக்கல் முரளிக்கு சான்ஸ் அடிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கேற்ப ரெட்டியார்கள் மாநாட்டை பொறுப்பாக நடத்தி நேருவிடம் நல்ல பெயர் வாங்கினார் முரளி. ஆனால், இப்போது பேச்சு வேறு திசையில் திரும்பியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in