திமுக போட்டியிடும் தொகுதிகள் - வேட்பாளர்கள்...! அறிவாலயத்தில் காத்திருக்கும் உத்தேசப்பட்டியல்!

திமுக போட்டியிடும் தொகுதிகள் - வேட்பாளர்கள்...! அறிவாலயத்தில் காத்திருக்கும் உத்தேசப்பட்டியல்!

குள.சண்முகசுந்தரம்

விஜயகாந்த், அதிமுக கூட்டணி பக்கம் சாயலாம் எனச் செய்திகள் வந்தாலும் இன்னமும் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது திமுக கூட்டணி. அதேசமயம் அவரது வருகைக்காகக் காத்திருக்காமல் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து வைத்துவிட்டது அறிவாலயத்தின் ஓஎம்ஜி குரூப்!

இந்த முறை மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரையை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு ஓஎம்ஜி குரூப் தந்திருக்கும் சர்வேயின் அடிப்படையிலேயே திமுக வேட்பாளர் தேர்வு நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கட்சியினர் மத்தியில் கருத்துகளைக் கேட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 5 நபர்களைத் தேர்வு செய்திருக்கிறது ஓஎம்ஜி குரூப். அதிலிருந்து ஒருவரை இறுதி வேட்பாளராக டிக் செய்திருக்கிறார்கள். ஒருசில தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளின் விருப்பப் பட்டியலிலும் இருப்பதால் அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியல் இதுதான். வடசென்னை - வழக்கறிஞர் வீ.கண்ணதாசன் (இந்தத் தொகுதியை சிபிஎம்மும் கேட்கிறது), மத்திய சென்னை - தயாநிதி மாறன், தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (காங்கிரஸும் இந்தத் தொகுதியைக் கேட்கிறது), ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் - முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி அல்லது வழக்கறிஞர் பரந்தாமன், கிருஷ்ணகிரி - சீனிவாசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), தருமபுரி - முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், திருவண்ணாமலை - கடந்த முறை போட்டியிட்ட அண்ணாதுரை அல்லது முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர், விழுப்புரம் - முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் (இந்தத் தொகுதிக்காக விசிகவும் போராடுகிறது), வேலூர் - கதிர் ஆனந்த், கரூர் - முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, தஞ்சை - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நீலகிரி - ஆ.ராசா, பொள்ளாச்சி - பைந்தமிழ் பாரி, தென்காசி- முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜன் அல்லது ஆ.ராசாவின் ஆதரவாளரான நெல்லை துரை (இந்தத் தொகுதியை சிபிஐ-யும் கேட்கிறது), தூத்துக்குடி - கனிமொழி. மதுரை - முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் (இந்தத் தொகுதி சிபிஎம் விருப்பத்திலும் இருக்கிறது)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in