கரூரில் ஸீட் இல்லை... தம்பிதுரையைக் கதறவிட்ட பாஜக!

கரூரில் ஸீட் இல்லை... தம்பிதுரையைக் கதறவிட்ட பாஜக!

குள.சண்முகசுந்தரம்

வெற்றிக்கூட்டணியை அமைத்துவிட்டதாக அதிமுக தரப்பு உற்சாகத்தில் மிதந்தாலும் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு இந்த நிமிடம் வரையிலும் நிம்மதி திரும்பவில்லை.

அதிமுகவுடன் பாஜக திரைமறைவில் கூட்டணி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தும், பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே பகிரங்க குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தார் தம்பிதுரை. அதிமுக தரப்பில் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தம்பிதுரை உண்மையைப் பேசுவதாக திமுகவின் கனிமொழி உள்ளிட்டவர்கள் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள்.

இந்தச் சூழலில், ”தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டுமானால் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும்” என்று கொளுத்திப் போட்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. இதற்கு, “குருமூர்த்தி பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. பாஜகவை அவர்கள் வளர்க்கட்டும். ஆனால், பாஜகவை சுமந்துசெல்ல அதிமுகவினர் என்ன பாவம் செய்தார்கள்?” என்று சூட்டோடு சூடாய் எதிர்வினையாற்றினார் தம்பிதுரை. உடனே பதறிப்போன ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் சிலர், “அது தம்பிதுரையின் சொந்தக் கருத்து... அதிமுக தலைமையின் கருத்தல்ல” என்று சப்பைக்கட்டு கட்டினார்கள். அதிமுகவினர் சொன்னாலும் பரவாயில்லை... தமிழிசை, பொன்னார் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், “அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து” என்று சொன்னார்கள்; அதிமுக தரப்பில் இதையும் கேட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in