மோடி மறந்தும்கூட ஏழைகளுக்கு உதவி செய்ய மாட்டார்!- காங்கிரஸ் தலைமையோடு முரண்படும் ஜோதிமணி

மோடி மறந்தும்கூட ஏழைகளுக்கு உதவி செய்ய மாட்டார்!- காங்கிரஸ் தலைமையோடு முரண்படும் ஜோதிமணி

கரு.முத்து

பாராளுமன்றத்தில் நிறைவேறிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்று உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி. “மசோதாவை காங்கிரஸ் ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது” என்று சொல்லும் ஜோதிமணி தனது நிலைப்பாடு குறித்து காமதேனுக்கு அளித்த விரிவான பேட்டியிலிருந்து...

பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மக்களை முன்னுக்குக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தவறானது என எப்படிச் சொல்கிறீர்கள்?

இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கானது. அது பொருளாதார அடிப்படையிலானது அல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அப்படித்தான் சொல்கிறது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்டதோ, தனி மனிதனுக்கானதோ அல்ல; ஒரு குழுவுக்கானது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் சாதிக்கானது. இந்திய சமூகம் சாதி அடிப்படையில் கட்டமைக்கப்படுள்ளது. சாதி அடிப்படையிலான சமூகத்தில், வரலாற்று அநீதிக்கு நீதி வழங்குவதுதான் இட ஒதுக்கீட்டின் நோக்கம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in