காங்கிரஸை திமுக உதாசீனப்படுத்துகிறதோ என்ற சந்தேகம்...- கலகக் குரல் எழுப்பும் கராத்தே தியாகராஜன்!

காங்கிரஸை திமுக உதாசீனப்படுத்துகிறதோ என்ற சந்தேகம்...- கலகக் குரல் எழுப்பும் கராத்தே தியாகராஜன்!

திமுக எந்தப் போராட்டம் நடத்தினாலும் எதற்காகக் கூட்டம் போட்டாலும் தோழமைக் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முதல் ஆளாக வந்து கலந்து கொள்கிறார். ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் நடத்திய  முழு அடைப்புக்கு திமுக அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கும்  முழு அடைப்பு நாளில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் கிரிராஜனை அனுப்பிவிட்டு ஒதுங்கிக்கொண்டது திமுக தலைமை.

இந்த விவகாரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் வெளிப்படையாகவே வெடித்துவிட்டார்.

“திமுக நடத்தும் போராட்டங்களில் காங்கிர ஸின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கி றார்கள். திமுக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக் கரசரே கலந்து கொள்கிறார். அவர் கலந்து கொள் ளமுடியாத சூழலில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியை அனுப்பிவைக்கிறார்.  ஆனால், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமது சகோதரி கனி மொழியையோ, பொருளாளர் துரைமுருகனையோ அனுப்பியிருக்கலாம். குறைந்தபட்சம் மாவட்டச் செயலாளர், இந்தத் தொகுதி எம்.எல்.ஏ - இவர்களையாவது அனுப்பியிருக்கலாம்” என ஆர்ப்பாட்டத்தில் தனது ஆதங்கத்தைக் கொட்டினார் கராத்தே.

இதைக் கேட்டு, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக-வினர் எதிர்ப்பு கோஷம் போட்டதைப் பற்றியெல்லாம் கராத்தே கவலைப்படவில்லை. இதன் பிறகு பேசிய திருநாவுக்கரசர், “யார் கலந்துகொண்டது என்பது முக்கியமல்ல, எந்தெந்தக் கட்சிகள் கலந்துகொண்டன என்பதுதான் முக்கியம்” என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், கராத்தே தியாகராஜன் திரி கொளுத்திப் போட்டது இரண்டு கட்சிக்குள்ளும் புகைந்துகொண்டிருக்கிறது. கராத்தேயின் பேச்சு கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளான நிலையில்,காங்கிரஸ் தரப்பிலிருந்தே பலரும் கராத்தே தியாக ராஜனைத் தொடர்புகொண்டு “நீங்கள் பேசியது சரிதான்” எனப் பாராட்டும் தெரிவித்தார்களாம்.  இந்தச் சூழலில் கராத்தே தியாகராஜனை நேரில் சந்தித்து அவரிடம் ஒரு சில கேள்விகளை முன்வைத்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in