குளிர் காலத்தில் இதை எல்லாம் மிஸ் பண்ணாதீங்க... ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்!

காமதேனு

குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சவாலான விஷயம். குளிர் காலங்களில் இந்த உணவு வகைகளை எல்லாம் மிஸ் பண்ணவே பண்ணாதீங்க...

பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வெப்பம் குறைந்து இரவு நேரங்களில் குளிர் அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை குளிர் இருக்கும்.

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை மிஸ் பண்ணக்கூடாது.

ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உங்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க முடியும்.

இது நம் கண்கள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவதால் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவை கிடைக்கின்றன.

அத்துடன் கேரட், பப்பாளி, ஆப்ரிகாட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவை வைட்டமின்கள் குறைபாட்டை ஈடுசெய்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.