காமதேனு
இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் திருடப்படுகின்றன. அதில் டெல்லியில் மட்டும் 56,000 கார்கள் திருப்படுவதாக புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கிறது.
திருடர்களின் சாய்ஸாக உள்ள கார்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டாப் 5 கார்கள் எவை என பார்ப்போம்.
5. இந்த லிஸ்ட்டில் ஐந்தாம் இடத்தில் இருப்பது ஹோண்டா சிட்டி கார்கள்.
ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் இதுதான் என்கின்றனர்.
90களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காருக்கு இன்று வரை மவுசு உள்ளதால் இந்த கார்களை திருடர்கள் குறி வைப்பதாக கூறப்படுகிறது.
4. நான்காவது இடத்தில் இருக்கும் கார் ஹூண்டாய் சாண்ட்ரோ.
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் வகை கார்களில் முன்னனியில் இருக்கிறது.
இந்த கார்கள் மறு விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் இரண்டிற்காகவும் திருடப்படுகின்றன.
3. மூன்றாம் இடத்தில் இருப்பது ஹூண்டாய் க்ரெட்டா கார்.
குடும்பத்தினர் பயணிக்க கார் வாங்குவோரின் சிறந்த தேர்வாக இது இருக்குமாம்.
இது உதிரி பாகங்களுக்காகவே திருடப்படுகிறது என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
2. இரண்டாம் இடத்தில் மாருதியின் சுசூகி வாகன்ஆர் கார்கள்.
இது மாருதியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மாடல் என்கின்றனர்.
திருடர்கள் விரும்ப காரணம் குறைந்த விலை, மறு விற்பனையிலும் எப்போதும் மோஸ்ட் வான்டட்.
1. இந்தியாவில் திருடுப்போகும் கார்களில் முன்னணியில் இருப்பது மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள்.
2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் உள்ளது.
திருடர்களையும் ஈர்க்க இதன் மறுவிற்பனை விலை அதிகம் என்பது தான் காரணம் என்கிறார்கள்.
கார் வாங்குவது மட்டுமல்ல அதனை பாதுகாப்பாக நிறுத்துவதும் கூட இன்றைய சூழலில் அவசியமாகிறது.