கர்வா செளத் 2023: முதல் முறையாக கொண்டாடும் பிரபலங்கள்... கலர்ஃபுல் புகைப்படம்!

காமதேனு

கடந்த செப்டம்பர் மாதம் உதய்பூர் லீலா பேலஸில் எம்பி ராகவ் சதாவை மணம் புரிந்தார் நடிகை பரினிதி சோப்ரா. அவருக்கு முதல் கர்வா செளத் பண்டிகை இது.

நடிகர்கள் கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ரா இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் முடித்திருக்க, அவர்களின் முதல் கர்வா செளத்திற்காக கையில் நட்சத்திர மெகந்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் கியாரா.

நடிகை ஸ்வரா பாஸ்கர் அரசியல்வாதியான பஹத் அஹமதுவை இந்த வருடம் பிப்ரவரியில் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கும் இது முதல் கர்வா செளத் பண்டிகை.

நடிகை ஆதித்ய ஷெட்டி, கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் இருவரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரியில் திருமணம் முடித்தனர். முதல் கர்வா செளத்திற்கு ஆர்வத்துடன் காத்திருப்பதாகக் கூறியுள்ளார் ஆதித்ய ஷெட்டி.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நண்பரான சோஹேல் கதுரியாவை கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

முதல் கர்வா செளத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கையில் மெகந்தி இட்டுக் கொண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் ஹன்சிகா.