தவெக கல்வி விருது விழா நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு!

வெப் ஸ்டோரீஸ்

பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினார் விஜய்.

இந்த கல்வி விருது வழங்கும் விழா இரண்டாம் ஆண்டாக நடைபெறுகிறது.

போதைப்பொருள் பழக்கம் வேண்டாம் என மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார் விஜய்.

வருங்காலத்தில் அரசியலையும் ஒரு துறையாக மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

சமூகவலைதளங்களில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வருடம் நாங்குநேரி மாணவன் சின்னத்துரை அருகில் அமர்ந்தார்.

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் எளிமையான வெள்ளை உடை அணிந்து வந்தார்.

முதல் கட்ட நிகழ்வு இன்று சென்னை, நீலாங்கரையில் நடைபெற்றது.

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மதியம் அறுசுவை சைவ விருந்து வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அரங்கத்திற்கு மொபைல் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு வைரக் கம்மலும், மாணவர்களுக்கு வைர மோதிரமும், ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார் விஜய்.