Jio MAMI Film Festival: கமல்ஹாசன், மணிரத்னம், பா.இரஞ்சித்... ஒன்றுகூடிய பிரபலங்கள்... கலக்கல் ஆல்பம்!

காமதேனு

மும்பையில் நடிகர்கள் கமல்ஹாசன், பா.இரஞ்சித், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டப் பல பிரபங்கள் கலந்து கொண்ட ஜியோ மாமி ஃபிலிம் பெஸ்டிவல் நடந்து வருகிறது.

அக்டோபர் 27ஆம் தேதி ஆரம்பித்த இந்த பட விழா நவம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

’தங்கலான்’ பட இயக்குநர் இரஞ்சித்தும் இதில் கலந்து கொண்டுள்ளார்.

’சித்தா’ படம் மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் சித்தார்த் தனது காதலி அதிதியுடன் கலந்து கொண்டார்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கருப்பு நிற குர்தா அணிந்து வந்தார்.

கருப்பு நிற உடையில் அசத்தினார் கரீனா கபூர்.

ஊதா கலரின் இந்திய பாரம்பரிய டச்சோடு அட்டகாசமாக உடை அணிந்து வந்திருந்தார் ராஷி கண்ணா.

இவர்கள் தவிர சோனம் கபூர், சன்னி லியோன், ஷோபிதா என பல பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.