அதிக கவர்ச்சி ஏன்? கேள்வியால் கடுப்பான தமன்னா!

காமதேனு

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் நடிகை தமன்னா.

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் தமன்னா.

நிகழ்வில் கார்த்தியால்தான் தமிழ் கற்றுக் கொண்டேன் எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ரம்பா, கணவரின் மேஜிக் ஹோம் ஷோவைத் திறந்து வைத்தார்.

இதில் பத்திரிகையாளர் ஒருவர் ‘பாகுபலி’க்கு பின் ஏன் தமிழில் படங்கள் நடிக்கவில்லை எனக் கேட்க, ’போய் கூகுள் செய்யுங்கள்’ எனக் கூறினார் தமன்னா.

அதோடு விடாமல், சமீபகாலமாக அதிக கிளாமர் ஏன் எனக் கேட்க கடுப்பான தமன்னா தேவையில்லாத கேள்வி இது என்றார்.