ஷிம்மர் சேலையில் மாளவிகா மோகனின் அசத்தல் தீபாவளி லுக்:லைக்ஸ் தெறிக்க விடும் ரசிகர்கள்!

காமதேனு

’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களுக்கு பிறகு நடிகை மாளவிகா ‘தங்கலான்’ படத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இதில் கஷ்டப்பட்டு நடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான டீசரிலும் இவரது நடிப்பு கவனம் பெற்றது.

இந்தப் படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் மாளவிகா மோகனன்.

இப்போது தீபாவளி சேலை எனக் குறிப்பிட்டு புது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பார்ட்டிக்கு அணிய முடியவில்லை என்றாலும் இந்த தீபாவளிக்கு அணிந்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டு இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.