அமலாபால்- ஜெகத் தேசாய் திருமணம்... கலர்ஃபுல் புகைப்படங்கள்!

காமதேனு

நடிகை அமலாபால் தனது தோழரும் காதலருமான ஜெகத் தேசாயை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

நண்பர்கள், உறவினர்கள் சூழ கொச்சியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

லைட்டான பர்பிள் கலர் லெஹன்கா மற்றும் ஷெர்வானியை மணமக்கள் தேர்வு செய்திருந்தனர்.

அன்பும் காதலும் எங்களை இணைத்துள்ளது. உங்கள் ஆசி வேண்டும் என்று கூறியுள்ளார் அமலாபால்.

இரு உடல், ஓர் ஆன்மா, அவளுடன் கைக்கோத்து வாழ்நாள் முழுவதும் நடக்கிறேன் எனக் கூறியுள்ளார் ஜெகத்.

அமலா- ஜெகத் தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காமதேனு வாசகர்கள் சார்பாகவும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள்!