காமதேனு
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நடிகர் அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது.
அர்ஜூன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானார் உமாபதி.
தை மாதம் நடைபெற இருக்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது.