காமதேனு
நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனும், நடிகருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் இன்று இத்தாலியில் நடைபெற்றுள்ளது.
நடிகர் வருண் தேஜும், நடிகை லாவண்யாவும் 'மிஸ்டர் சித்ரா' என்ற படத்தில் நடித்த போது காதலிக்க தொடங்கினர்.
படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றது. இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், விஷயம் வெளியே தெரிய தொடங்கியது.
இந்நிலையில், இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அவர்கள் இத்தாலியில் காதலிக்க தொடங்கியதால் சென்டிமென்டாக அங்கேயே திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
திருமணத்தில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.
நவம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள என் கன்வென்ஷன் சென்டரில் வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அக்டோபர் 30ம் தேதி காக்டெயில் பார்ட்டியும், நேற்று ஹல்தி ஃபங்க்ஷனும் நடந்து முடிந்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று மதியம் 2.48 மணிக்கு அவர்களது திருமணம் நடைபெற்றது.
வருண் தேஜ் மற்றும் லாவண்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு ஆடைகளை பாலிவுட்டை சேர்ந்த நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மணமக்களுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.