இரத்த சோகை 
பெண் சக்தி

அதிர்ச்சி... இந்தியாவில் 10 பெண்களில் 6 பேர் இரத்த சோகையால் பாதிப்பு!

காமதேனு

இந்தியாவில் 10 பெண்களில் 6 பேர் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

இரத்த சோகை

இரத்த சோகை என்பது இந்தியாவில் குறிப்பாக பெண்களைப் பாதிக்கும் முக்கியமான பொது சுகாதார பிரச்சனையாக இருந்து வருகிறது. இரத்த சோகை ஒரு நபரின் இரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறையுடன் தொடர்புடையது, இதன் விளைவாக பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

குழந்தை இல்லாத பெண்களை விட குறைந்தது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இளம்பெண்கள் அதிகளவில் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாலூட்டும் தாய்மார்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளம்பெண்கள், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பெண்களை விட இரத்த சோகையால் பாதிக்கப்படுவது குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு அரிசியை உள்ளடக்கிய மாறுபட்ட மற்றும் சத்தான உணவின் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, சிவப்பு அரிசி பாரம்பரியமாக இந்த மாநிலங்களில் உட்கொள்ளப்படுகிறது மற்றும் அவர்களின் கலாச்சாரம் உள்நாட்டில் விளையும் மற்றும் பருவகால உணவுகளை வலியுறுத்துகிறது. சிவப்பு அரிசி, இறைச்சியின் அதிக நுகர்வு உட்பட மேற்கண்ட காரணிகள் இந்த பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்க பங்களிக்கின்றன.

இரத்த சோகை

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) மற்றும் பிற நிறுவனங்களின் ஆய்வில், இந்தியாவில் 15 முதல் 19 வயதுடைய பெண்களின் மோசமான ஊட்டச்சத்து நிலை, பொருளாதாரம் மற்றும் சமூக காரணிகள், கல்வி, சிறுவயது திருமணம், தாய்மை உள்ளிட்ட காரணங்கள் இரத்தசோகையுடன் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்களில் 21 வெவ்வேறு அளவுகளில் இரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

அசாம், சத்தீஸ்கர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 15 சதவீத உயர்வையும், பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, பீகார் மற்றும், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐந்து சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) இந்தியாவில் ஒவ்வொரு 10 பெண்களில் 6 பேர் இரத்த சோகை அல்லது இரத்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT