உணர்

3 ஆண்டுகளில் இந்தியாவில் 329 புலிகள் மரணம்: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது மத்திய அரசு!

காமதேனு

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 329 புலிகள் மரணமடைந்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே நேற்று அளித்த தரவுகளின்படி, இந்தியாவில் 2019-ல் 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும், 2021-ல் 127 புலிகளும் இறந்துள்ளன என தெரிவித்துள்ளார்

உயிரிந்த இந்த புலிகளில், 68 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், 5 புலிகள் இயற்கைக்கு மாறான காரணங்களுக்காகவும், 29 புலிகள் வேட்டையாடலாலும், 30 புலிகள் ‘பிடிப்பு’ காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இதுவரை உயிரிழந்தவற்றில் மொத்தம் 197 புலிகள் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், பல ஆண்டுகளாக அதிகரித்த வேட்டையாடுதல் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக குறைந்துள்ளது. 2019-ல் வேட்டையால் 17 புலிகள் உயிரிழந்த நிலையில், 2021-ல் அது நான்காக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் 61 பேர் மற்றும் உத்தரபிரதேசத்தில் 25 பேர் உட்பட இந்த 3 ஆண்டுகளில் புலிகளின் தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT