மாநிலம்

கல்லூரியில் திருநங்கைகள் இலவசமாக படிக்கலாம்: தமிழக அரசு

காமதேனு

தமிழகத்தில் உள்ள 131 கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் திருநங்கைகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். பேருந்தில் பெண்களுக்கு மட்டுமே இலவச பயணம் என்று இருந்த நிலையில், தாங்களும் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு திருநங்கைகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது திருநங்கைகளும் பேருந்தில் இலவச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையிலும் திருநங்கைகள் உயர் பதவிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளில் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்நிலையில், கல்லூரிகளில் திருநங்கைகள் சேர்ந்து இலவசமாக படிக்கலாம் என்ற ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 131 கல்லூரிகளிலும் தலா ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு இலவசமாக வழங்குவதாக தயார் என ஏற்கனவே துணைவேந்தர் அறிவித்துள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT