அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள் 
மாநிலம்

பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்... பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை!

காமதேனு

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ளது.

அரசுப் பேருந்துகள்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 6 கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகள்

மேலும், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பிப்ரவரி 6ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பேச்சு வார்த்தையை ஒத்தி வைக்க ஒப்புக்கொண்டனர்.

மேலும், தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிப்ரவரி 7ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை... பிரதமர் மோடி வருகையால் திடீர் கட்டுப்பாடு!

கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை... வெளியானது முதல் புகைப்படம்!

சென்னையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை... அமலாக்கத் துறையும் அதிரடி!

'அன்னபூரணி' பட விவகாரம்... வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா!

SCROLL FOR NEXT